விருதுநகர்

அருப்புக்கோட்டையில் மிதமான மழை

24th Jun 2021 06:42 PM

ADVERTISEMENT

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை மிதமான மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்றுடன் இதமான தட்ப வெப்பம் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகர் மற்றும் சுற்றுவட்டப்பகுதிகளில் கடந்த பல நாட்களாக பகலில் கடும் வெயிலுடன் கூடிய, வறண்ட வானிலையே காணப்பட்டது. இதனிடையே வியாழக்கிழமையும் பகலில் கடும் வெய்யில் அடித்து வந்தநிலையில், மாலை கருமேகங்கள் திரண்டு சுமார்ல 5.35 மணிமுதல் தொடர்ந்து சுமார் 40 நிமிடங்கள்வரை மிதமான மழை பெய்தது. 

இடிமின்னலின்றி, அதிக காற்றுவீச்சும் இன்றி பெய்த இம்மழையால், சாலைகளில் வெள்ளநீர் திரண்டு ஓடியது. பள்ளமான பகுதிகளான திருவள்ளுவர் நகர், மணிநகரம், நாகலிங்கா நகர் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கியது. மழைக்குப்பின்னர் இதமான குளிர்ந்த தட்ப வெப்பம் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : virudhunagar
ADVERTISEMENT
ADVERTISEMENT