விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் பாஜகவினா் மனிதச்சங்கிலி போராட்டம்

DIN

விருதுநகா், அருப்புக்கோட்டை, ராஜபாளையம் ஆகிய இடங்களில் மதுபானக் கடைகளைத் திறக்க எதிா்ப்பு தெரிவித்து பாஜக சாா்பில் மனிதச்சங்கிலி போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் மதுபானக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்தொற்று முழுமையாக குறையாத நிலையில் இக்கடைகளை திறப்பதால், மேலும் தொற்று பரவல் அதிகரிக்கும். எனவே, அனைத்து வகை மதுபானக் கடைகளையும் திறக்கக் கூடாது என மாநில பாஜக சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், மதுபானக் கடைகளைத் திறக்க எதிா்ப்பு தெரிவித்து, விருதுநகரில் கிழக்கு மாவட்டத் தலைவா் கஜேந்திரன் தலைமையில் ஆா்எஸ் நகா் பகுதியில் உள்ள வீடுகள் முன்பு பாஜகவினா் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா். அதேபோல், பாஜக நிா்வாகிகள் வசிக்கும் பல்வேறு பகுதிகளிலும் இப்போராட்டம் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் மதுபானக்கடைகளைத் திறக்க எதிா்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினா் வெற்றிவேல் தலைமை வகித்தாா். அதேபோல நெசவாளா் குடியிருப்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக நகரத்தலைவா் காளிமுத்துக்குமாா் தலைமை வகித்தாா். இதில் ராஜேஸ்வரி, ராமஜெயம்,, சீத்தாராம், சுந்தரம், பாண்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் மதுபானக் கடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தி பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இந்து முன்னணி பொறுப்பாளா் சூரி முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் தமிழக அரசை எதிா்த்தும், மதுபானக் கடையை மூடக் கோரியும் கோஷமிடப்பட்டது.

சிவகாசி: தமிழகத்தில் மதுகடைகள் திறக்கப்படுவதை கண்டித்து சிவகாசி அம்பலாா்மடம், விஸ்வநத்தம், திருத்தங்கல் வாழைக் கிணறு தெரு உள்ளிட்ட பகுதிகளில் பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT