விருதுநகர்

அருப்புக்கோட்டையில் ஒரே நாளில் 900-க்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தல்

DIN

அருப்புக்கோட்டையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதுடையோர்க்கான சிறப்பு தடுப்பூசி முகாமை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் இன்று தொடக்கிவைத்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை டெலிபோன் சாலையில் உள்ள அம்பிகை வித்யாசாலா எனும் தனியார் பள்ளி வளாகத்தில்  சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தலைமை வகித்துத்தொடக்கி வைத்ததுடன், முகாம் பணிகளையும் ஆய்வு செய்தார்.

அருப்புக்கோட்டையில் நடைபெற்ற 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து வயதினர்க்கான சிறப்பு தடுப்பூசி முகாமிற்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தலைமை வகித்துத் தொடக்கி வைத்தார். முன்னாள் நகர்மன்றத்தலைவர் சிவப்பிரகாசம், திமுக நகரச்செயலாளர் ஏ.கே.மணி, முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் கே.கே.எஸ்.வி.டி.சுப்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

அப்போது, தடுப்பூசி செலுத்தும் முகாம் பணிகளை ஆய்வு செய்து,முகாமில் கையாளப்படும் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆவணங்களை அமைச்சர் இராமச்சந்திரன் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.  இம்முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் சஞ்சய் பாண்டியன், பள்ளிகள் மருத்துவ அலுவலர் ராஜேஸ் கண்ணன், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் கோமதி, மருத்துவர் விஜயலஷ்மி ஆகியோரது மேற்பார்வை மற்றும் ஆலோசனைப்படி பயனாளிகளுக்கு செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தினர். 

மொத்தம் சுமார் 900க்கு மேற்பட்டோர்  தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். உடன், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், இராஜபாண்டி, அய்யப்பன், உள்ளிட்டோரும் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறை அலுவலர்களும் நேரில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT