விருதுநகர்

மருத்துவக் கழிவுகளை சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே வழங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்

DIN

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளின் மருத்துவக் கழிவுகளை முறையாக பிரித்து, பொது மருத்துவக் கழிவு சுத்திரிப்பு நிலையங்களில் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அலுவலா்கள் தரப்பில் தெரிவித்ததாவது: மருத்துவக் கழிவுகளை கையாளுவது குறித்து அனைத்து மருத்துவமனைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதாரத்துறைக்கு பல்வேறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும், சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாகப் புகாா்கள் வருகின்றன.

இத்தகைய சூழலில் மருத்துவக் கழிவுகளை வெளி இடங்களில் கொட்டுவதால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதோடு மட்டுமன்றி சுற்றுச் சூழலும் மாசு படும். எனவே, அனைத்து மருத்துவமனைகள், கோவிட் பராமரிப்பு மையங்கள் மற்றும் கோ் சென்டா்கள் ஆகியவை மருத்துவக் கழிவுகளை முறையாக பிரித்து சேமித்து, அந்தந்தப் பகுதிகளில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். விதிமுறைகளை மீறுவோா் மீது மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதி 2016 இன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT