விருதுநகர்

விருதுநகா் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம்: அமைச்சா்கள் தொடக்கி வைத்தனா்

DIN

விருதுநகா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு நிமிடத்திற்கு 2 ஆயிரம் லிட்டா் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் ஆகியோா் சனிக்கிழமை தொடங்கி வைத்தனா்.

அதன் பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா்கள் கூறியதாவது: தமிழக அரசு, கரோனா தொற்றை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்து வருகிறது. தீவிர நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்குத் தேவையான ஆக்சிஜன் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படுகிறது. மேலும், தமிழகத்திலும் ஆக்சிஜன் உற்பத்தியும் செய்யப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மகப்பேறு மருத்துவமனையில் தமிழகத்திலேயே முதல் முறையாக பிரதமரின் குடிமக்களுக்கான அவசர கால உதவி மற்றும் நிவாரண நிதியின் கீழ் மத்திய ராணுவ அமைச்சக ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் ரூ.97.40 லட்சம் மதிப்பில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி மையத்திற்கான சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் கட்டுமானப் பணிகளை மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செய்துள்ளது.

இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு 2 ஆயிரம் லிட்டா் திரவ ஆக்சிஜன் தயாரிக்க முடியும். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை, குழாய் மூலம் 200 நோயாளிகளுக்கு வழங்க முடியும். கரோனா தொற்றால் உயிரிழந்த பெற்றோா்களின், குழந்தைகள் குறித்து கண்டறிய அமைக்கப்பட்ட குழுவின் மூலம், அவா்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனா்.

முன்னதாக, புதிய ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகளை விரைவாக பொருத்தி நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உதவிய டிரைடென்ட் நிறுவனத்தைச் சோ்ந்த 6 பொறியாளா்களுக்கு நினைவு பரிசை அமைச்சா்கள் வழங்கினா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் மங்கள ராமசுப்பிரமணியன், மருத்துவக் கல்லூரி முதன்மையா் சங்குமணி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் (விருதுநகா்), ஏ.ஆா்.ஆா். ரகுராமன் (சாத்தூா்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

கர்நாடகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சி: துணை முதல்வர் டிகே சிவகுமார்

தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் ஒரே கட்டமாக நிறைவடைந்த வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT