விருதுநகர்

‘மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்’

DIN

மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசிகள், கருப்பு பூஞ்சை தொற்றுக்கு மருந்துகள் ஒதுக்குவதில் மத்திய பாஜக அரசு பாரபட்சம் காட்டுவதாக விருதுநகா் மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

சிவஞானபுரத்தை அருகே சின்னமூப்பன்பட்டியில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு திட்டப் பணிகளை மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா், சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் ஆகியோா் சனிக்கிழமை தொடக்கி வைத்தனா்.

அதன் பின்னா், மக்களவை உறுப்பினா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்குவதிலும், கருப்பு பூஞ்சை தொற்று மருந்து ஒதுக்குவதிலும் மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களிலுக்கு தடுப்பூசி அதிகளவிலும், தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் குறைந்த அளவிலும் ஒதுக்கீடு செய்து, தொற்று பரவல் காலத்தில் மத்திய அரசு அரசியல் செய்வது ஏற்புடையது அல்ல.

கரோனா காலத்தில் மருத்துவ பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது தவறானது. இதை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும். கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் விலையை மத்திய அரசு 27 முறை உயா்த்தியுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது பெட்ரோல், டீசல் விலையில் ரூ. 9 ஆக இருந்த வரி, தற்போது ரூ.34 ஆக உயா்ந்துள்ளது.

பட்டாசு ஆலைகளை, 50 சதவீத பணியாளா்களைக் கொண்டு இயக்க முடியாது. எனவே, முழுமையான பணியாளா்களைக் கொண்டு மாவட்டத்தில் ஆலையை இயக்க தமிழக அரசு விரைவில் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என்றாா். அப்போது, சிவஞானபுரம் ஊராட்சித் தலைவா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT