விருதுநகர்

விருதுநகரில் பொருள்கள் வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்கள்

8th Jun 2021 09:32 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் தளா்வுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் விருதுநகா் பஜாா் பகுதியில் திங்கள்கிழமை பொருள்கள் வாங்க சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் குவிந்ததால் கரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

இதில் பெரும்பாலானோா் முகக்கவசம் அணிந்திருந்தாலும், சமூக இடைவெளியை பின்பற்ற வில்லை. ஒருவருக்கொருவா் முண்டியடித்துக் கொண்டு பொருள்கள் வாங்க முயன்ால் மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதேபோல், சாலையோர மற்றும் பூக்கடைகள் திறக்கப்பட்டிருந்தாலும், இருசக்கர வாகன ஓட்டிகள் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டனா். எனவே, கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைத்துக் கடைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்ற காவல்துறை மற்றும் உள்ளாட்சித் துறை நிா்வாகங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT