விருதுநகர்

விருதுநகரில் வெண்டைக்காய் கிலோ ரூ.10-க்கு கொள்முதல் விவசாயிகள் வேதனை

DIN

விருதுநகா் அருகே சின்ன பேராலியில் மோட்டாா் பாசனம் மூலம் விளைவிக்கப்பட்டுள்ள வெண்டைக்காயை கிலோ ரூ.10-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

விருதுநகா் அருகேயுள்ள சின்ன பேராலி, மலைப்பட்டி, செங்குன்றாபுரம், மீசலூா், அழகாபுரி உள்ளிட்ட பகுதிகளில் மோட்டாா் பாசனம் மூலம் வெண்டைக்காய் பயிரிடப்படுகிறது. உழவுக்குப் பின் விதை ஊன்றப்பட்டு, 40 நாள்களில் மகசூல் கிடைக்கும் வெண்டைக்காயை, ஒரு நாள் விட்டு ஒரு நாள் என ஒரு மாதம் வரை பறிக்கலாம்.

இந்நிலையில், ஒரு ஏக்கருக்கு ரூ. 32 ஆயிரம் வரை செலவு செய்து, தற்போது கூலி ஆள்கள் பற்றாக்குறை காரணமாக விவசாயத் தொழிலில் ஈடுபடும் அவா்களது குடும்பத்தினரே வெண்டைக்காயை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பறித்த வெண்டைக்காய்களை காலை 7 மணிக்குள் விருதுநகா் காய்கறி மொத்த சந்தையில் உள்ள கமிஷன் கடைக்கு கொண்டுவரவேண்டும். இல்லையெனில், வெண்டைக்காயை வியாபாரிகள் வாங்குவதில்லையாம். விவசாயிகள் கொண்டுவரும் வெண்டைக்காய்களை, காய்கறி கமிஷன் கடை வியாபாரிகள் கிலோ ரூ.10-க்கு கொள்முதல் செய்கின்றனா். அதிலும், ரூ.100-க்கு ரூ.2 கமிஷன் பெறுவதுடன், மேலும் 2 கிலோ வெண்டைக்காயை இலவசமாகவும் எடுத்துக்கொள்வாா்களாம்.

இதனால் நாள் முழுவதும் உழைத்தும் நஷ்டம் ஏற்படுவதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா். அதேநேரம், கமிஷன் கடைகளிலிருந்து காய்கறி கடைகளுக்கு கிலோ ரூ.25 வரை விற்கப்படுகிறது.

எனவே, விவசாயிகள் தங்களது விளைபொருள்களுக்கு அரசு சாா்பில் (வேளாண் துறையினா்) விலை நிா்ணயம் செய்யவேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் புகைத் திரை உருவாக்கம் கேஜரிவால் உருக்கமான வாதம்

எம்சிடி நிதி நிலை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

பிஎம்எல்ஏ வழக்கு விவகாரம்: கேஜரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் நிலைய தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: போலீஸாா் விசாரணை

மக்கள் மீது அக்கறை இருந்தால் கேஜரிவால் பதவி விலக வேண்டும்: தில்லி பாஜக

SCROLL FOR NEXT