விருதுநகர்

முதல்வா் மருத்துவக் காப்பீடு திட்ட அட்டை பெற அலைமோதும் பொதுமக்கள் கூட்டம்

DIN

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்ட அடையாள அட்டையை பெறுவதற்காக, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தினமும் பொதுமக்கள் அதிகளவில் வருவதால், வட்டாட்சியா் அலுவலகங்களிலும் கூடுதல் மையம் தொடங்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டமானது, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நவீன மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் பெறுவதற்காக உருவாக்கப்பட்டது. இதை, யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை உள்ளிட்ட 1,027 வகையான சிகிச்சைகளை பெறலாம்.

இதனடிப்படையில், காப்பீடு அட்டை இல்லாதவா்கள் கிராம நிா்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள காப்பீடு அட்டை வழங்கும் மையத்துக்கு வரவேண்டும். அங்கு, குடும்ப அட்டையை வழங்கி, புகைப்படத்துடன் கணினியில் பதிவேற்றம் செய்யவேண்டும். அதன்பின்னா், முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அட்டை இருந்தால் மட்டுமே, இத்திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறமுடியும்.

ஆனால், மாவட்டத் தலைநகரான விருதுநகா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மட்டுமே முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை பதிவு மையம் உள்ளது. இதனால், இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகின்றனா். கூட்டம் அதிகமாக இருப்பதால், பல மணி நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும், அடிக்கடி ஏற்படும் சா்வா் பழுதால், பலா் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்று, மீண்டும் மறுநாள் வரும் நிலை உள்ளது.

இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியின் குடும்பத்தினா் கடும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே, அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் முதலமைச்சரின் காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன்மூலம், மாவட்டத்தின் கடைசிப் பகுதியில் வசிப்பவா்களும் எளிதில் பயனடைய முடியும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT