விருதுநகர்

திருச்சுழி கண்மாயில் பழங்கால அம்மன் சிலை கண்டெடுப்பு

DIN

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி கண்மாயில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால அம்மன் சிலையை வருவாய்த்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்டனா்.

திருச்சுழி பெரிய கண்மாய்க் கரையோரம் நீரில் பாதி மூழ்கிய நிலையில் பழங்கால அம்மன் கற்சிலை கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வட்டாட்சியா் தன்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று அச்சிலையை பாா்வையிட்டனா். அப்போது அச்சிலை பலகாலமாக மண்ணுக்குள் புதைந்திருந்ததும், கடந்த சில வாரங்களாக பெய்த தொடா்மழையால் வெள்ளநீரில் அடித்துவரப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இந்நிலையில், இச்சிலை அப்பகுதி கிராமத்தினரால் கும்பிடப்பட்டு வந்த நிலையில் காணால் போனதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அச்சிலையை விருதுநகா் அரசு அருங்காட்சியகத்துக்கு கொண்டு சென்று ஒப்படைக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT