விருதுநகர்

தேசிய அறிவியல் மாநாடு: விடத்தாகுளம் அரசுப் பள்ளி மாணவிகளின் ஆய்வறிக்கை தேர்வு

24th Jan 2021 07:38 PM

ADVERTISEMENT

திருச்சுழி வட்டம் நரிக்குடி அருகே உள்ள விடத்தாகுளம் அரசுப்பள்ளிமாணவிகள் பா,தேவகி மற்றும் க.குமரபாரதி ஆகிய இருமாணவிகள் சமர்ப்பித்த அறிவியல் ஆய்வறிக்கையானது, தேசிய அறிவியல் மாநாட்டிற்குத் தேர்வாகி சிறப்பிடம் பெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் நரிக்குடி அருகே உள்ள விடத்தாகுளம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு பயிலும் பத்தாம் வகுப்பு மாணவிகளான பா.தேவகி மற்றும் க.குமரபாரதி ஆகியோர், கடந்த சில நாள்களுக்கு முன்னர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய அறிவியல் ஆய்வறிக்கைப் போட்டியில், நிலையான வாழ்விற்கு சூழலியல் மற்றும் பொருளாதாரத்தில் பனையின் பங்களிப்பு, எனும் தலைப்பில் தாங்களும் கலந்து கொண்டு ஆய்வறிக்கை சமர்ப்பித்தனராம். 

இதில் அம்மாணவிகளின் ஆய்வறிக்கையானது தேசிய அறிவியல் மாநாட்டிற்குத் தேர்வாகி சிறப்பிடம் பெற்றுள்ளது. இதுதொடர்பாக இவ்விருமாணனவிகள் கூறியதாவது, எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியையான நா.மீனாம்பிகையின் ஆலோசனையின்படி, வழிகாட்டி ஆசிரியை ச.முத்துக்குமாரி ஆகியோர் உதவியாக இருந்து, ஊக்கமளித்ததாலேயே எங்களால் இந்த வெற்றியை எட்ட முடிந்தது.  ஆகவே அவர்களுக்கும், மற்றுமுள்ள எங்கள் பள்ளியின் பிற ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம், எனத் தெரிவித்தனர்.

மாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்த ஒரு எளிய, பனைமரங்கள் சூழ்ந்த கிராமமான விடத்தாகுளத்தின் அரசுப்பள்ளி மாணவிகளின் ஆய்வறிக்கை தேசிய அளவிலான அறிவியல் மாநாட்டிற்குத் தேர்வானது குறித்து, பள்ளித்தலைமை ஆசிரியையும், பிற ஆசிரியர்களும், மேலும் அக்கிராமத்தினரும், அப்பள்ளியின் பிற மாணவ, மாணவிகளும் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

Tags : virudhunagar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT