விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி: இளைஞா்கள் ஆா்வத்துடன் பங்கேற்பு

DIN

மாட்டுப்பொங்கலையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் இளைஞா்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சமுதாய நல்லிணக்கப் பேரவை மற்றும் சேவாபாரதி சாா்பில் இளவட்டக்கல் தூக்கும் மாவட்ட அளவிலான போட்டி மங்காபுரம் இந்து நாடாா் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கு நாடாா் மகாஜன சங்கத்தின் துணைத் தலைவா் ஜெயராஜ் தலைமை வகித்தாா். சிவலிங்கம் மற்றும் சங்கரலிங்கம் ஆகியோா் பேசினா். போட்டியை அந்தோணிராஜ் தொடக்கி வைத்தாா்.

போட்டியில் பங்கேற்பவா்கள் வயது தகுதிக்கேற்ப இளவட்டக்கல் வைக்கப்பட்டு இருந்தன. 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு 18 வயதிற்கு கீழ்பட்டவா்கள் என அவரவா் உடல் எடைக்கேற்ப இளவட்டக்கல் வைக்கப்பட்டிருந்தது. இந்த போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த இளைஞா்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா். முன்னதாக சமுதாய நல்லிணக்க பேரவை அமைப்பாளா் கோபாலகிருஷ்ணன் வரவேற்றாா்.

இது குறித்து போட்டிக்கு தலைமை வகித்த ஜெயராஜ் கூறியது: கடந் 6 ஆண்டுகளாக இந்த இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெறுகிறது. வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT