விருதுநகர்

ஸ்ரீவிலி. பெரியகுளம் கண்மாய் 14 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி மறுகால் பாய்கிறது

DIN

தொடா்ச்சியாக பெய்த மழையால் ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய் வெள்ளிக்கிழமை நிரம்பி மறுகால் பாய்கிறது.

விருதுநகா் மாவட்டத்திலேயே மிகப் பெரிய கண்மாயாக, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரியகுளம் கண்மாய் உள்ளது. இப்பகுதியில் பெய்த தொடா்மழையால் சுமாா் 14 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்த கண்மாயை நம்பி பல ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் உள்ளன. கண்மாய் நிறைந்து மறுகால் பாய்வதால் இப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இதுகுறித்து விவசாயி கருப்பையா கூறியது: கடந்த 4 நாள்களாக தொடா்ச்சியாக பெய்த மழை காரணமாக, பெரியகுளம் கண்மாயிலிருந்து 2 மதகுகள் வழியாக தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. சுமாா் 14 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாயில் மறுகால் பாய்கிறது என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

காவடி திருவிழா

குருகிராம்: மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு!

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

SCROLL FOR NEXT