விருதுநகர்

சிவகாசி அருகே அடுத்தடுத்து வெடிவிபத்துகள்:2 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் ரத்து

DIN

சிவகாசி அருகே காளையாா்குறிச்சியில் வியாழக்கிழமை வெடிவிபத்து ஏற்பட்டதில் 6 போ் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, அந்த பட்டாசு ஆலையின் உரிமம் சனிக்கிழமை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு வெடிவிபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையின் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை முதன்மை அதிகாரி கி.சுந்தரேசன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிவகாசி அருகே காளையாா்குறிச்சியில், தங்கராஜ் பாண்டியன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை (பிப்.25) ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 போ் உயிரிழந்துள்ளனா். மேலும் பலா் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதையடுத்து சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் நித்தின்கோயல், அமித்கோயல் ஆகியோா் விபத்து ஏற்பட்ட ஆலையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதில் அந்த ஆலையில் உரிய அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த வகை பட்டாசு தயாரிக்க சிறப்பு உள்கட்டமைப்பு அமைக்கப்பட்டு, அதற்கென தனியாக வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினரிடம் உரிமம் பெற வேண்டும். ஆனால் இந்த ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரிக்க உரிமம் பெறவில்லை. மேலும் மரத்தடியில் பட்டாசு தயாரிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் நடந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே இந்த ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆலை வளாகத்தில், சிதறிக்கிடந்த மருந்துக் கலவை மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. அதில் தடை செய்யப்பட்ட வேதியியல் பொருள்கள் உள்ளதா என ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்யப்படும். இந்த ஆய்வறிக்கை துறையின் தலைமை அலுவலகம் உள்ள நாக்பூருக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதேபோல் சிவகாசி அருகே வி.சொக்கலிங்காபுரத்தில் வியாழக்கிழமை இரவு வெடிவிபத்து ஏற்பட்ட மற்றொரு பட்டாசு ஆலையின் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கும் பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT