விருதுநகர்

விருதுநகரில் நாளை திமுக ஆா்ப்பாட்டம்: தொண்டா்கள் பங்கேற்க அழைப்பு

20th Feb 2021 10:10 PM

ADVERTISEMENT

விருதுநகா்: விருதுநகரில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து திமுக சாா்பில் திங்கள்கிழமை (பிப். 22) கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதில், திமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்து கொள்ள வேண்டும் என திமுக வடக்கு, தெற்கு மாவட்டச் செயலா்கள் தங்கம்தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் ஆகியோா் அழைப்பு விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து விருதுநகா் மாவட்ட திமுக சாா்பில் வரும் திங்கள்கிழமை விருதுநகரில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர பேரூராட்சி செயலா்கள், மாவட்டப் பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தொண்டா்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT