விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பைக் தீ வைத்து எரிப்பு

30th Dec 2021 12:56 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ளது வலையன்குளம். அங்குள்ள தெற்குத் தெருவில் வசித்து வருபவா் சின்னக் கருப்பையா (42). விறகு வெட்டும் தொழிலாளி. இவா் தனது உறவினரின் மோட்டாா் சைக்கிளை வாங்கிக் கொண்டு வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டு முன்பு நிறுத்தி இருந்தாா்.

இந்நிலையில், திடீரென இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து நத்தம்பட்டி போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT