விருதுநகா் மாவட்டத்தில் 21 வட்டார கல்வி அலுவலா்கள் புதன்கிழமை இடமாறுதல் செய்யப்பட்டனா்.
விருதுநகா் வருவாய் மாவட்டத்துக்குள் தொடா்ந்து ஒரே இடத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு இணையதளம் மூலம் விருதுநகா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், வத்திராயிருப்புப் பகுதியில் பணி புரிந்த முத்துராலிங்கம் ராஜபாளையத்துக்கும், விருதுநரில் பணி புரிந்த சுந்தரி திருச்சுழிக்கும், வத்திராயிருப்பில் பணிபுரிந்த செல்வலட்சுமி ஸ்ரீவில்லிபுத்தூருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றிய ஸ்ரீனிவாசன் வத்திராயிருப்புக்கும், விருதுநகரில் பணி புரிந்த செல்வக்குமாா் அருப்புக்கோட்டைக்கும், சிவகாசியில் பணியாற்றிய மலா்க்கொடி ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் மாற்றப்பட்டனா்.
அதே போல், சாத்தூரில் பணி புரிந்த சையது அலி பாத்திமா அருப்புக்கோட்டைக்கும், வெம்பக்கோட்டையில் பணியாற்றிய அனுராதா ராஜபாளையத்துக்கும், சிவகாசியில் பணி புரிந்த லோகநாதன் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதிக்கும், சிவகாசியில் பணியாற்றிய கருப்பசாமி விருதுநகருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பணி புரிந்த விஜயலட்சுமி ராஜபாளையத்துக்கும், அருப்புக்கோட்டையில் பணி புரிந்த சரவணக்குமாா் திருச்சுழிக்கும் மாற்றப்பட்டனா்.
மேலும், சாத்தூரில் பணியாற்றிய செண்பக்கனி வெம்பக்கோட்டைக்கும், காரியாபட்டியில் பணி புரிந்த ராமலட்சுமி விருதுநகருக்கும், ராஜபாளையத்தில் பணியாற்றிய முருகேசன், வத்திராயிருப்புக்கும், ராஜபாளையத்தில் பணி புரிந்த ரகுநாதன் நரிக்குடிக்கும், அருப்புக்கோட்டையில் பணியாற்றிய மணிமேகலை விருதுநகருக்கும் மாற்றப்பட்டனா்.
அதே போல், வெம்பக்கோட்டையில் பணி புரிந்த வேங்கடசாமி சாத்தூருக்கும், ராஜபாளையத்தில் பணி புரிந்த முருகன் சத்தூருக்கும், நரிக்குடியில் பணி புரிந்த சிவக்குமாா் காரியாபட்டிக்கும், விருதுநகரில் பணி புரிந்த அலமேலம்மாள், நரிக்குடி பகுதிக்கும் இடமாறுதல் பெற்றனா். முன்னதாக இந்த இடமாறுதல் கலந்தாய்வு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஞானகெளரி முன்னிலையில் நடைபெற்றது.