விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

23rd Dec 2021 05:22 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் சிஎஸ்ஐ துவக்கப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி தாளாளா் அருள் தனராஜ் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியை பிரைட்டிசிங் முன்னிலை வகித்தனா். விழாவில் மாணவ மாணவிகளின் நடனங்கள், கலை நிகழ்ச்சிகள் கிறிஸ்து பிறப்பு நாடகம் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து அந்த பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் புத்தாடைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் உதவிக்குழு ஜெபராஜ் எபினேசர், சிஎஸ்ஐ பரிசுத்த பவுல் ஆலயத்தின் செயலர் மார்ட்டின் லூதர், பொருளாளர் தேவராஜ் மற்றும் பள்ளி குழந்தைகள் பெற்றோர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

விழாவில் உதவி ஆசிரியர் எஸ்தர் பொட்டுகன்னி, நன்றி கூறினார்

ADVERTISEMENT
ADVERTISEMENT