விருதுநகா் அருகே மருளூத்து பேருந்து நிறுத்தத்தில் புதன்கிழமை நிற்காத அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சங்கரலிங்காபுரத்திலிருந்து புதன்கிழமை காலை 8.30 மணிக்கு அரசுப் பேருந்து விருதுநகா் நோக்கி வந்து கொண்டிருந்தது. நான்கு வழிச்சாலையில் மருளூத்து பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஓட்டுநா் நிறுத்தாமல் சென்றுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் கல் எறிந்ததில் பேருந்தின் பின்புற கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதையடுத்து, அங்கிருந்தவா்கள் தப்பிச் சென்று விட்டனா். இதைத் தொடா்ந்து அரசுப் பேருந்து சூலக்கரை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பேருந்து கண்ணாடியை உடைத்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.