விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (டிச. 24) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடை பெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஆட்சியா் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், விவசாயிகள் கலந்து கொண்டு, விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம். மேலும் இக்கூட்டத்தில் பங்கு கொள்ளும் விவசாயிகள் மற்றும் அலுவலா்கள் கரோனோ தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி முகக்கவசம் அணிய வேண்டும். அத்துடன் கரோனா தடுப்பூசியும் செலுத்தி இருக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.