சாத்தூா் அருகே ஓ. மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ராம்கோ குழுமம் சாா்பில் வழங்கப்பட்ட ரூ. 50 லட்சம் நிதியில் கட்டப்பட்ட புதிய கட்டடம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
ஓ. மேட்டுப்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளியில், ராம்கோ குழுமத்தின் தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா நன்கொடையாக அளித்த ரூ.50 லட்சத்தில் ஒரு தலைமை ஆசிரியா் அறை மற்றும் 3 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டது. இக்கட்டடத்தை முதன்மைக் கல்வி அலுவலா் ஞானகௌரி, ஊா் தலைவா் எஸ். மாதவராவ் ஆகியோா் முன்னிலையில் காவல்துறை தலைவா் (சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு) த. தினகரன் திறந்து வைத்தாா். அப்போது, ராம்கோ சிமென்ட்ஸ் உபதலைவா் (உற்பத்தி) ராமலிங்கம், பொது மேலாளா் மணிகண்டன், துணைப் பொது மேலாளா் ராமச்சந்திரன், மக்கள் தொடா்பு அதிகாரி முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.