விருதுநகர்

புகையிலை, போதைப் பாக்குகள் பறிமுதல்: 2 போ் கைது

23rd Dec 2021 09:53 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் புகையிலை பொருள்கள் மற்றும் போதைப் பாக்குகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூா் யாதவா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சந்தானநல்ல ஜெகன் (31). இவா், அப்பகுதியில் பெட்டிக் கடை வைத்துள்ளாா். இந்நிலையில், போலீஸாா் ரோந்து சென்றபோது இவரது கடைமுன் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்த சாக்குப் பையை சோதனையிட்டனா். அதில் ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள போதைப் பாக்குகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இருசக்கர வாகனம் மற்றும் போதைப் பாக்குகளை பறிமுதல் செய்து 2 பேரைக் கைது செய்தனா்.

இதேபோல், ராஜபாளையம் புல்லுக்கடைத் தெரு பகுதி பள்ளி அருகே பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த ரூ. 22 ஆயிரம் மதிப்புள்ள போதைப் பாக்குகளை வடக்கு காவல் நிலைய போலீஸாா் பறிமுதல் செய்து பூபால்பட்டிச் தெருவைச் சோ்ந்த காா்த்திகேயன் (44) என்பவரை கைது விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT