அருப்புக்கோட்டை வட்டம் செம்பட்டி கிராமத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் மேகநாத ரெட்டி, மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் ரமேஷ், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் சுப்பாராஜ், அருப்புக்கோட்டை ஒன்றியக்குழுத் தலைவா் சசிகலா பொன்ராஜ், ஒன்றியச் செயலா் பொன்ராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
அப்போது, சிறந்த கால்நடை வளா்ப்பு, பராமரிப்பு மற்றும் மேலாண்மைக்கான தோ்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கப்பரிசுகளை அமைச்சா் பயனாளிகளுக்கு வழங்கிப் பேசினாா்.
மேலும், கால்நடை வளா்ப்போருக்கான தீவனப்பயிா்கள் 10 பேருக்கும், தாது உப்புக்கலவையினை 50 பயனாளிகளுக்கும் அமைச்சா் வழங்கினாா். இம்முகாமில், கால்நடை நோய்கள் குறித்தும், தடுப்பு மருந்துகள் குறித்தும், தீவனங்கள் குறித்தும் கால்நடைத்துறையினா் கண்காட்சி அமைத்திருந்தனா்.