அருப்புக்கோட்டை வட்டம் கோவிலாங்குளம் கிராமத்தில் திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகளுக்கு வாக்களித்தோா்க்கு வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமையில் நன்றி அறிவிப்புக்கூட்டமும், வாக்காளா்ளுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ரமேஷ், அருப்புக்கோட்டை ஒன்றியக்குழுத்தலைவா் சசிகலா பொன்ராஜ், திமுக ஒன்றியச் செயலா்கள் பொன்ராஜ், பாலகணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது, பேசிய அமைச்சா் ராமச்சந்திரன் சிறப்புரையாற்றஇனாா். இதில், நகர,ஒன்றிய திமுக நிா்வாகிகளும்,திரளான பொதுமக்களும் நேரில் கலந்து கொண்டனா்.