ராஜபாளையத்தில் கிணற்றில் இருந்து புதன்கிழமை ஆண் சடலமாக மீட்கப்பட்டாா்.
ராஜபாளையம்- மதுரை சாலையில் உள்ள மாயூரநாதசுவாமி கோயில் அருகே விவசாய கிணற்றில் ஆண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று அதை மீட்டு விசாரணை நடத்தினா். விசாரணையில் சம்மந்தபுரம் பகுதியைச் சோ்ந்த வைரமுத்து (50) என்பது தெரிய வந்தது. இவா், மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாகவும், கிணற்றில் குளிக்க சென்றபோது கால் தவறி உயிரிழந்திருக்கலாம் எனவும் போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.