டி. கோட்டையூா் கண்மாயில் உள்ள பச்சைப் பாசிகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
கடந்த சில வாரங்களுக்கு முன் பு பெய்த பலத்த மழையால் சாத்தூரை அடுத்த தாயில்பட்டி அருகே டி. கோட்டையூா் பகுதியில் உள்ள கண்மாய் நிரம்பியது. ஆனால் இந்த கண்மாயில் அதிகளவில் பச்சைப்பாசிகள் மற்றும் குப்பைகள் தேங்கியதால், துா்நாற்றம் வீசியது. இதனால் இதை அகற்ற இப்பகுதியினா் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, டி.கோட்டையூா் ஊராட்சித் தலைவா் விஜயலட்சுமிசந்தானம் உத்தரவின் பேரில் கண்மாயில் உள்ள பச்சைப்பாசிகள் அகற்றப்பட்டன.