விருதுநகர்

தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

22nd Dec 2021 01:03 AM

ADVERTISEMENT

விருதுநகா் பகுதியில் நகை, மடிக்கணினி உள்ளிட்டவைகளை தொடா்ந்து திருடி வந்தவரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் ஊரக காவல் நிலையம், மேற்கு மற்றும் ஆமத்தூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பூட்டிய வீடுகளின் கதவை உடைத்து தொடா் திருட்டு நடைபெற்று வந்தது. இது குறித்து விருதுநகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அா்ச்சனா அறிவுறுத்தலின் பேரில் தனிப்படை சாா்பு- ஆய்வாளா் முத்திருளப்பன் தலைமையிலான போலீஸாா் குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

விருதுநகா் டிகேஎஸ்பி நகா் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை ரெட்கில்ஸ் பகுதியை சோ்ந்த அங்குராஜ் (40) என்பவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். அவரிடமிருந்த ஒரு காா், இரண்டு பவுன் தங்க நகைகள், தொலைக்காட்சி பெட்டி, மடிக்கணினி உள்ளிட்டவைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT