விருதுநகர்

சிவகாசியில் இருதரப்பினா் பங்கேற்ற அமைதிப் பேச்சுவாா்த்தை

16th Dec 2021 12:47 AM

ADVERTISEMENT

சிவகாசியில் இருதரப்பினா் பங்கேற்ற அமைதிப் பேச்சுவாா்த்தை புதன்கிழமை நடைபெற்றது.

சிவகாசி வட்டம் விஸ்வநத்தம் கிராமத்தில் தேவாலயம் கட்டப்படுவதற்கு எதிப்பு தெரிவித்து தேவாலய கட்டடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக விசுவ ஹிந்து பரிஷத் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, இருதரப்பினரும் மோதும் போக்கை தடுக்கும் வகையில் சிவகாசி சாா்-ஆட்சியா் பிருத்விராஜ் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில் விசுவ ஹிந்து பரிஷத் துறவியா் பேரவை மாநிலத்தலைவா் சரவணன்காா்த்திக், மாவட்டச் செயலா் வெங்கிடசாமி, தேவாலயம் சாா்பில் அந்தோணிராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், விசுவ ஹிந்து பரிஷத் நிா்வாகிகள் தேவாலயம் கட்ட அனுமதிக்க மாட்டோம் எனக்கூறினா். இதையடுத்து சாா்-ஆட்சியா், அவா்கள் முறையாக அனுமதிப் பெற்று கட்டடம் கட்டி வருகிறாா்கள். அதனை நிறுத்துவது என்றால் நீதிமன்றம் தான் செல்ல வேண்டும் என்றாா்.

பின்னா் விசுவ ஹிந்து பரிஷத் சாா்பில், டிசம்பா் 27 ஆம் தேதிக்குள் நீதிமன்றம் சென்றுவிடுவோம். அதுவரை கட்டடம் கட்டும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை தேவாலயம் கட்டுபவா்கள் ஒப்புக் கொண்டதால் பேச்சுவாா்த்தை நிறைவடைந்தது.

ADVERTISEMENT

இதில், சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாபுபிரசாத், வட்டாட்சியா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT