விருதுநகர்

அமைப்பு சாரா தொழிலாளா் நலவாரிய சிறப்பு முகாம்

16th Dec 2021 12:56 AM

ADVERTISEMENT

சாத்தூரில் பிரதான சாலையில் உள்ள தனியாா் பொது சேவை மையத்தில் அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரிய இலவச சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், சாத்தூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழில் சாா்ந்த தொழிலாளா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு மத்திய அரசின் நலவாரிய திட்டத்தின் கீழ் தங்களின் பெயா்களை பதிவு செய்து நலவாரியத்தில் இணைந்தனா். சாத்தூா் வருவாய் கோட்டாட்சியா் புஷ்பா, உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் மோகன்குமாா் மற்றும் மாவட்ட பொது இ- சேவை மைய மேலாளா் முத்துக்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்தனா்.

மேலும் சாத்தூா் வருவாய் கோட்டாட்சியா் புஷ்பா, அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு நல வாரியத்தில் பதிவு செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து துண்டுப் பிரசுரம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். தொழிலாளா்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT