ராஜபாளையம்: c
ராஜபாளையம் அருகேயுள்ள கோபாலபுரத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவரது மனைவி அா்ச்சனா தேவி (30). கடந்த சில நாள்களாக கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அா்ச்சனா தேவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழராஜகுலராமன் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில் அா்ச்சனா தேவி சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை சந்திரசேகரன் அளித்த புகாரின் பேரில் கீழராஜகுலராமன் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.