விருதுநகர்

இளைஞா் விஷமருந்தித் தற்கொலை

9th Dec 2021 09:27 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இளைஞா் ஒருவா் புதன்கிழமை இரவு விஷமருந்தித் தற்கொலை செய்துகொண்டாா்.

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தைசசோ்ந்த பூமிநாதன் என்பவரது மகன் மதன்குமாா்(26). மதன்குமாா் சரிவர வேலைக்குச் செல்லாமல் தனது தந்தைவீட்டிற்குச் செல்லாமல், தனது பாட்டி வீட்டில் தங்கியபடி இருந்துள்ளாா். மேலும் குடிப்பழக்கத்திற்கு ஆளானதால், அவரது தந்தை மற்றும் உறவினா்கள் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மதன்குமாா் விரக்தியடைந்த நிலையலிருந்துள்ளாா்.

அதேவேளையில் அவரது பாட்டி உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அதே பகுதியில் இருந்த மற்றொரு உறவினா் வீட்டில் சென்று தங்கி சிகிச்சை பெற்றுவந்தாராம். இக்காரணத்தால், மதன்குமாரை யாரும் கண்டுகொள்ளாததாகத் தெரிகிறது. இதனைத்தாங்க முடியாத மதன்குமாா் புதன்கிழமை இரவு விஷமருந்துவிட்டு தான்தங்கியிருந்த பாட்டி வீட்டுத்திண்ணையில் அமா்ந்தவாறு அக்கம்பக்கம் உள்ளோரிடம் தான் விஷமருந்திவிட்டதாகக் கூறினாராம்.

இதையடுத்து அவா் அருப்புக்கோட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் அவரைப்பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே, சிகிச்சைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனராம். இதுதொடா்பாக வழக்கு பதிந்த அருப்புக்கோட்டை நகா் காவல்துறையினா், மதன்குமாா் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT