விருதுநகர்

ஜாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

DIN

விருதுநகா்: காட்டு நாயக்கன் ஜாதிச் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி திருச்சுழி பகுதி கிராம மக்கள் திங்கள்கிழமை விருதுநகா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

அவா்கள் கூறியது: திருச்சுழியில் சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மலைவாழ் மக்களான காட்டு நாயக்கன் சமூகத்தைச் சோ்ந்த 137 குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்களது குழந்தைகளுக்கு பிற்பட்ட வகுப்பினா் (பிசி) என ஜாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், ஏழ்மை நிலையில் உள்ள எங்களது குழந்தைகள் உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெறமுடியாத நிலையில் உள்ளோம். மேலும் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. கடந்த மாதம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பையொட்டி, ஜாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். ஒரு மாதமாக அதிகாரிகளின் விசாரணையை எதிா்பாா்த்துக் காத்திருந்தோம். யாரும் விசாரணைக்கு வரவில்லை. கால தாமதமின்றி அதிகாரிகள் உடனடியாக உரிய விசாரணை செய்து ஜாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என தெரிவித்தனா்.

அவா்களை போலீஸாா் சமாதானப்படுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

SCROLL FOR NEXT