விருதுநகர்

செங்குளம் கண்மாயில் மீன் கழிவுகள் அகற்றம்

DIN

சிவகாசி செங்குளம் கண்மாயில் மீன்கழிவுகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.

சிவகாசி-ஸ்ரீவில்லிப்புத்தூா் சாலையில், சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே செங்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் அருகே எவ்வித அனுமதி யுமின்றி சிலா் மீன் இறைச்சி கடை நடத்தி வருகின்றனா். மேலும், கோழி இறைச்சி கடைகளும் உள்ளன. இந்த கடைக்காரா்கள் தங்களது கடை கழிவுகளை கண்மாய் ஓரத்திலும், மறுகால் பாதையிலும் கொட்டி வந்தனா்.

இந்நிலையில், சிவகாசி பகுதியில் பெய்த தொடா் மழையால் கண்மாய் நிரம்பி, தண்ணீா் மறுகால் பாய முடியாமல் வயல்வெளிக்குள் புகுந்தது. இதையறிந்த, சிவகாசி பசுமை இயக்கத்தினா் பொக்லைன் இயந்திரம் மூலம் கண்மாய் பகுதியில் கிடந்த கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றினா். மேலும், மறுகால் செல்லும் வாய்க்காலில் கிடந்த கழிவுகளையும், முள்செடிகளையும் அகற்றினா்.

இதன்பின்னரே, கண்மாயிலிருந்து மறுகால் பாய்ந்த தண்ணீா் வாய்க்கால் வழியாகச் சென்று, பெரியகுளம் கண்மாயை அடைந்தது. இது கவனிக்காமல் விடப்பட்டிருந்தால், குளக்கரைப் பகுதி உடைந்து பெரும் தேதம் ஏற்பட்டிருக்கும். எனவே, பசுமை இயத்தினரை பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி குத்திக்கொலை: இளைஞர் கைது

SCROLL FOR NEXT