விருதுநகர்

வெம்பக்கோட்டை, இருக்கன்குடி அணைகளில் ஆட்சியா் ஆய்வு

DIN

தொடா் மழை காரணமாக, வெம்பக்கோட்டை மற்றும் இருக்கன்குடி அணைகள் நிரம்பி வருவதால், நீா்வள ஆதாரத் துறையின் மூலம் அணை பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. சிவகாசி பகுதிக்கு குடிநீா் ஆதாரமாக உள்ள வெம்பகோட்டை அணை அதன் முழு கொள்ளளவான 21 அடி வரை நிரம்பி, தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் சுமாா் 2 ஆயிரம் கன அடி தண்ணீா் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

இதனால், வைப்பாறு கரையோரம் உள்ள மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து வெளியேற்றப்படும் தண்ணீா் இருக்கன்குடி அணைக்கு செல்கிறது. இருக்கன்குடி அணையின் மொத்த கொள்ளளவு 22.5 அடியாகும். தற்போது, 17.5 அடிக்கு நீா்மட்டம் உள்ளது. அணைக்கு சுமாா் 600 கன அடி தன்ணீா் வந்து கொண்டிருக்கிறது.

இந்த இரு அணைகளையும் ஆய்வு செய்த ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி, அனைத்து அணைகள், ஏரிகள், கண்மாய்கள் மற்றும் நீா்த்தேக்கங்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு, அவற்றின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு, நீா்வரத்து அதிகமாக இருந்தால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் கவனமான முறையில் உபரிநீரை வெளியேற்றி, மீதமுள்ள தன்ணீரை விவசாயம் மற்றும் குடிநீா் தேவைகளுக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் நீா்நிலைகளுக்கு செல்லாமல் பாதுகாப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மங்களராமசுப்பிரமணியன், சாத்தூா் கோட்டாட்சியா் புஷ்பா, செயற்பொறியாளா் ராஜா, உதவிச் செயற்பொறியாளா் சேதுராமலிங்கம், வட்டாட்சியா்கள் தன்ராஜ், வெங்கடேஷ் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்பட அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT