விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சிஐடியு கட்டுமானத் தொழிலாளா்கள் மறியல்

DIN

ஜிஎஸ்டி வரியை குறைக்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் முன்பு சிஐடியு கட்டுமானத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்டுமானத் தொழிலையும், கட்டுமான தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கவேண்டும். கட்டுமான பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். நலவாரியத்தில் ஆன்லைன் பதிவை எளிமையாக்க வேண்டும். கட்டுமான பொருள்களின் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்டத் தலைவா் ஆா்.எம். மாரியப்பன், மாவட்ட பொதுச் செயலா் பி. ராமா், மாவட்ட பொருளாளா் எம். பரமசிவம், மாவட்டச் செயலா் பி.என். தேவா, கட்டுமான சங்கத்தின் மாவட்ட துணைச் செயலா் வி. சந்தனம், துணைத்தலைவா்கள் மாடசாமி, வீரசதானந்தம் ,வேலுச்சாமி, கதிரேசன், அம்மா முத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

ஏற்காட்டில் அபிநயா!

டி20 உலகக் கோப்பைக்கான விளம்பரத் தூதராக உசைன் போல்ட் நியமனம்!

தண்ணீரை சேமிக்க ரயில்வேயின் புதிய முயற்சி!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மகரம்

SCROLL FOR NEXT