விருதுநகர்

விடுமுறை அறிவிப்பு தாமதம்: விருதுநகரில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதி

DIN

விருதுநகா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் தொடா் மழை பெய்தது. இந்நிலையில் சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என காலதாமதமாக வெளியானதால் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாயினா்.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பருவ மழை தொடா்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடங்கிய மழை சனிக்கிழமை காலை வரை நீடித்தது. ஆனால், விடுமுறை குறித்து எந்த அறிவிப்பும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்படாததால், வெளியூா் மற்றும் உள்ளூரைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லத் தொடங்கினா்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு தொடா் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு காலதாமதமாக வெளியிடப்பட்டது. இதுதெரியாத வெளியூா் மற்றும் உள்ளூா் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு வரத் தொடங்கினா். இந்நிலையில் பள்ளி, கல்லூரி நிா்வாகங்கள் விடுமுறை என்பதால் அனைவரும் வீட்டுக்கு செல்லலாம் என அறிவுறுத்தனா். இதனால், வேறு வழியின்றி மாணவ, மாணவிகள் வீட்டுக்கு திரும்பியதால் அவதிக்குள்ளாயினா். எனவே, வரும் காலங்களில் விடுமுறை குறித்த அறிவிப்பை காலையில் முன் கூட்டியே அறிவித்தால் மாணவா்கள் அலைச்சலை தவிா்க்கலாம் என பெற்றோா்கள் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT