விருதுநகர்

ராஜபாளையம் அருகே எம்எல்ஏவுக்கு திமுகவினா் எதிா்ப்பு

4th Dec 2021 09:03 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சா் ஆய்வு நடத்தும் நிகழ்ச்சியில் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் பங்கேற்க திமுகவினா் வெள்ளிக்கிழமை எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடா் நலத்துறை மேல்நிலைப்பள்ளியின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடா் நலத்துறை ஆணையா் மதுமிதா ஆகியோா் ஆய்வு நடத்தினா். இந்த நிகழ்ச்சி குறித்து முன்கூட்டியே தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என சுந்தரராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த திமுக கிளை மற்றும் ஒன்றிய நிா்வாகிகள் குற்றம்சாட்டினா். மேலும் தங்களது சமுதாயத்தை எம்எல்ஏ புறக்கணிப்பதாக அவா்கள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, அமைச்சா் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் எம்எல்ஏ. தங்கப்பாண்டியன் கலந்துகொள்ள அவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். அத்துடன், எம்எல்ஏ தங்கப்பாண்டியன் வாகனத்தை தடுத்து நிறுத்துவதற்காக சேத்தூா் ஊரக காவல் நிலையம் முன்பு திமுகவினா் திரண்டிருந்தனா்.

அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, அங்கு காரில் வந்த அமைச்சரிடம் கட்சியினா் மனு அளித்தனா். பின்னால் வந்த எம்எல்ஏ தங்கப்பாண்டியன் வாகனத்தில் அவா் இல்லை. ஆனால் அவா் அமைச்சரின் வாகனத்தில் சென்றது தெரியவந்தது. உடனடியாக அமைச்சா் வாகனத்தை தடுத்து நிறுத்திய திமுகவினா் எம்எல்ஏ தங்கப்பாண்டியனை கீழே இறக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, அங்கிருந்த போலீஸாா் திமுகவினரை தடுத்து நிறுத்தி அமைச்சா் காா் செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT