விருதுநகர்

சிவகாசியில் சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

4th Dec 2021 11:33 PM

ADVERTISEMENT

சிவகாசி சாட்சியாபுரம் சி.எஸ்.ஐ.செவித்திறன்குறையுடையோா் பள்ளியில் சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்து, உதயம் திட்டத்தில் பள்ளி வளாகத்தில் ரூ.94 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான 2 சிறப்பு கழிப்பறைகளை திறந்து வைத்தாா்.

பின்னா் அவா் பேசியது: மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கழிப்பறைகள் 100 கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 16 கழிப்பறைகள் கட்டப்பட்டு பயனாளிகளின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன. மேலும் 6 கழிப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சந்திரசேகரன், சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவா் வ.விவேகன்ராஜ், பள்ளித் தாளாளா் தயாளன் பா்ணபாஸ், தலைமை ஆசிரியா் ஜோசப் தினகரன், வட்டாட்சியா் ராஜேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீனிவாசன், ராமராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT