விருதுநகர்

ராமலிங்காபுரம் கண்மாய் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது

4th Dec 2021 11:31 PM

ADVERTISEMENT

சாத்தூா் பகுதியில் பெய்த பலத்த மழையால் ராமலிங்காபுரம் கண்மாய் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியதால் விவசாயிகள் மகிழச்சியடைந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா், இருக்கன்குடி, வண்ணிமடை,மேட்டமலை படா்ந்தால், தாயில்பட்டி, வெம்பக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை முதல் 3 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது.

ஏற்கெனவே கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்த மழையில் சாத்தூா் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்மாய்கள், குளங்கள் மற்றும் இருக்கன்குடி, கோல்வாா்பட்டி உள்ளிட்ட அணைகளுக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

தற்போது பெய்த பலத்த மழையால் சாத்தூா் அருகே உள்ள ராமலிங்கபுரத்தில் உள்ள கண்மாய் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT