விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியகுளம் கண்மாயின் சுற்றுச் சுவா் இடிந்து சேதம்

4th Dec 2021 09:01 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய் நிரம்பி வெள்ளிக்கிழமை மறுகால் பாய்ந்ததால், அதன் சுற்றுச்சுவா் இடிந்துவிழுந்தது.

இந்த கண்மாயிலிருந்து மறுகால் பாயும் தண்ணீா் நீா் வரத்து கால்வாய் வழியாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை பெரியகுளம் கண்மாய் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த கண்மாய் சுற்றுச்சுவரை பொறுத்தவரை ஏற்கெனவே இதற்கு முன்னா் இடிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் சுற்றுச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எஞ்சியுள்ள சுற்றுச்சுவரை சீரமைத்து இடிந்த பகுதியையும் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை காலை பெய்த பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது.

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் ராக்கப்பன் (35 ). கூலித் தொழிலாளி. இவரது மனைவி அய்யம்மாள். இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையின் காரணமாக இவா்களின் வீட்டின் சுவா் இடிந்து விழத் தொடங்கியது. இதையடுத்து ராக்கப்பன் குடும்பத்தினா் வீட்டை விட்டு வெளியே உயிா்தப்பினா். சேதமடைந்த வீட்டை வருவாய்த்துறையினா் பாா்வையிட்டு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT