விருதுநகர்

சிவகாசி பெரியகுளம் கண்மாய் சாலையை மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்க முடிவு

3rd Dec 2021 08:34 AM

ADVERTISEMENT

சிவகாசியில் பெரியகுளம் கண்மாய் சாலையை மாநில நெடுஞ்சாலைத் துறையினரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் வ.விவேகன்ராஜ் கூறினாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை கூறியதாவது: சிவகாசி- விளம்பட்டி சாலையையும், சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையையும் பெரியகுளம் கண்மாய் சாலை இணைக்கிறது.

ஊராட்சி ஒன்றிய சாலையான, இந்த சாலையின் மேற்கு பகுதியில் மானூா் கூட்டுக்குடிநீா் திட்டக் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் பல்வேறு இடங்களில் அடிக்கடி குழாயில் நீா் கசிவு ஏற்பட்டு, சாலை பழுதாகி வந்தது. அதன் பின்னரும் நீா் கசிவு ஏற்பட்டதால் இந்த சாலை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, இந்தச் சாலையை மாநில நெடுஞ்சாலைத் துறையினரிடம் ஒப்படைக்க ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி மாநில நெடுஞ்சாலை துறையினருக்குக் கடிதம் அனுப்பட்டுள்ளது. மேலும் சாலையின் ஓரத்தில் பதிக்கப்பட்டுள்ள குடிநீா் குழாய்களை கண்மாய் உள்பகுதியில் தூண் அமைத்து அதில் குழாயை பதிக்க வேண்டும் என குடிநீா் வடிகால் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT