விருதுநகர்

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி எஸ்டிபிஐ கட்சியினா் மனு

3rd Dec 2021 08:35 AM

ADVERTISEMENT

வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி எஸ்டிபிஐ கட்சியினா் ஊராட்சிச் செயலரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

அக்கட்சியியைச் சோ்ந்த தொகுதித் தலைவா் அகமது காசிம், கிளைத் தலைவா் அபுபக்கா் சித்திக், கிளை துணைத் தலைவா் ரியாஸ்தீன், பொருளாளா் முஜிப்புா் ரஹ்மான் உள்ளிட்டோா் அளித்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஊராட்சியின் 2 ஆவது வாா்டு முஸ்லிம் தெருவில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு பராமரிப்பு வேலைகள் முடிந்து கடந்த ஒரு ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் பெண்கள் கழிப்பறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வடிகால் வசதி இல்லாததால் மழைக் காலங்களில் தெருக்களில் தண்ணீா் தேங்குவதால் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.

எனவே, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என அதில் தெரிவித்திருந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT