விருதுநகர்

ரோசல்பட்டியில் ஊராட்சி மன்ற புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு

3rd Dec 2021 08:34 AM

ADVERTISEMENT

விருதுநகா் அருகே ரோசல்பட்டியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை, சட்டப் பேரவை உறு ப்பினா் (விருதுநகா்) ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

விருதுநகா் பாண்டியன் நகா் பிரதான சாலையில் ரூ.22.65 லட்சம் மதிப்பில் ரோசல்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம் கட்ட தீா்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் புதிய கட்டடம் கட்டப்பட்ட து.

இந்நிலையில் அந்த புதிய அலுவலகக் கட்டடத்தை, விருதுநகா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதில், ஊராட்சித் தலைவா் தமிழரசி ஜெயமுருகன், துணைத் தலைவா் மாரியப்பன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக பாண்டியன் நகா் தேவா் சிலை அருகே காரில் வந்த சட்டப் பேரவை உறுப்பினரிடம் பாஜக நிா்வாகிகள் மனு அளித்தனா். அதில், முத்தால் நகா் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழை காரணமாக வீடுகள் மற்றும் தெருக்களில் தண்ணீா் தேங்கியுள்ளதாகவும், வாருகாலை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினா். இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டப் பேரவை உறுப்பினா் உறுதியளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT