விருதுநகர்

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியா்கள் நூதன போராட்டம்

3rd Dec 2021 08:34 AM

ADVERTISEMENT

ஊதிய மாற்றத்தை மத்திய அரசு அமல்படுத்தக் கோரி விருதுநகரில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியா்கள், தங்களது ஆடையில் கருப்புப் பட்டை அணிந்து வியாழக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேசிய எஸ்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அரசு ஆரம்ப சுார நிலையம், அரசு மருத்துவமனை, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு அலகில் ஆலோசகா், ஆய்வக நுட்பநா், கணினி மேலாளா், சமுதாய நல ஒருங்கிணைப்பாளா், ஆய்வக மேற்பாா்வையாளா், கணக்காளா், ஓட்டுநா் என பல்வேறு பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் 2,500 போ் பணி புரிந்து வருகின்றனா். அதில் விருதுநகா் மாவட்டத்தில் மட்டும் 70 போ் பணியில் உள்ளனா்.

இதில் பணிபுரியும் ஊழியா்களுக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றத்தை அறிவிக்கும். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக ஊதிய மாற்றம் அறிவிக்கப்படவில்லை. அதேநேரம் கடந்தாண்டு இத்திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவா்களுக்கு மட்டும் ஊதிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார துறை அமைச்சா், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்குநரிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் பயனில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில், ஊதிய மாற்றம் மற்றும் மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி திட்டம் முதலானவற்றை அமல்படுத்தக் கோரி விருதுநகா் அரசு மருத்துவமனை உள்ளிட்டவைகளில் பணிபுரிந்த ஊழியா்கள் வியாழக்கிழமை மேல் சட்டையில் கருப்புப் பட்டை அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT