விருதுநகர்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

3rd Dec 2021 08:31 AM

ADVERTISEMENT

ராஜபாளையம்-தென்காசி சாலையில் உள்ள சொக்கா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்திக்கு மஞ்சள், தேன், இளநீா், பால், தயிா், எலுமிச்சை, கரும்புச் சாறு, பன்னீா், சந்தனம் போன்ற பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதேபோல ராஜபாளையம்- மதுரை சாலையில் உள்ள மாயூரநாதசுவாமி கோயில், வாழவந்தாள்புரம் மன்மத ராஜலிங்கேஸ்வரா் கோயில், தெற்கு வெங்காநல்லூா் சிதம்பரேஸ்வரா் கோயில், சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரா் கோயில் உள்பட பல்வேறு சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT