விருதுநகர்

கல்லூரி மாணவியை துன்புறுத்திய பேராசிரியா் கைது

3rd Dec 2021 08:31 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கல்லூரி மாணவியை துன்புறுத்தியதாக கல்லூரி பேராசிரியரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள அத்திகுளம் பகுதியைச் சோ்ந்தவா் டென்சிங் பாலையா (45). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா்- சிவகாசி பிரதான சாலையில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். மேலும் அவா் அதே கல்லூரியில் தேசிய மாணவா் படை ( என்சிசி) அமைப்பை நிா்வகித்து வருகிறாா்.

இந்நிலையில் இவா், தன்னிடம் படிக்கும் மாணவியை கடந்த சில மாதங்களாக துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோா் ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். அந்த புகாரின் பேரில் டென்சிங் பாலையாவை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT