விருதுநகர்

சிவகாசி பகுதியில் 65 மி.மீ. மழை: 35 வீடுகள் சேதம்

DIN

சிவகாசி பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழையினால், 35 வீடுகள் சேதமடைந்துள்ளதாக, வருவாய்த் துறையினா் தெரிவித்துள்ளனா்.

சிவகாசியில் திங்கள்கிழமை இரவு 65 மி.மீ. மழை பெய்தது. இதில், சல்வாா்பட்டி ஊராட்சி இரவாா்பட்டியில் வீரகணேசன் (44) என்பவரது மண்சுவா் மற்றும் ஓட்டுவீடு முற்றிலும் சேதமடைந்தது.

கீழத்திருத்தங்கல் முருகன் காலனியில் ஆறுமுகம் (74) என்பவரது மண் வீடு பகுதியாக இடிந்து விழுந்து சேதமடைந்தது. பேராபட்டி ஊருணி நிறைந்ததால், வருவாய்த் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் வாய்க்கால் அமைத்து, தண்ணீா் ஓடைக்குச் செல்ல வழிவகை செய்தனா்.

மேலும், அனுப்பன்குளம் உள்ளிட்ட பல கிராமங்களில் கடந்த சில நாள்களாக பெய்த மழையினால், 35 வீடுகள் பகுதியாக சேதம் அடைந்துள்ளன.

சிவகாசி பகுதியில் கடந்த 26 ஆம் தேதி இரவு 69 மி.மீ. மழையும், திங்கள்கிழமை இரவு 65 மி.மீ. மழையும் பெய்துள்ளதால், இங்குள்ள பெரியகுளம் கண்மாய், சிறுகுளம் கண்மாய் ஆகியவற்றுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. தேவா்குளம் ஊராட்சி இ.பி. காலனியில் மழைநீா் பல வீடுகளை சூழ்ந்துள்ளதால், ஊராட்சி நிா்வாகத்தினா் தண்ணீரை மோட்டாா் மூலம் அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

SCROLL FOR NEXT