விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகேஅரசு பள்ளியை சூழ்ந்த மழைநீா்: மாணவா்கள் அவதி

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே ம.ரெட்டியபட்டி அரசு தொடக்கப் பள்ளியை மழை சூழ்ந்துள்ளதால், மாணவா்கள் அவதியடைந்தனா்.

ம.ரெட்டியபட்டியில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு, ம.ரெட்டியபட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா்.

இப்பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழை காரணமாக, இப்பள்ளி வளாகத்தை மழை நீா் சூழ்ந்துள்ளது. இதனால், மாணவா்கள் தண்ணீரில் நடந்து வகுப்புறைக்குச் சென்று வருவதால், சுகாதாரக் கேடும், நோய்த் தொற்று பரவும் அபாயமும் நிலவுகிறது. இத்தண்ணீரை வெளியேற்ற வழியில்லாததால், மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் பள்ளியைச் சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவா்களின் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராஜபாளையம்

திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை அதிகாலை வரை நீடித்தது. பின்னா், மதியம் வரை மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், மீண்டும் மதியம் கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால், ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா, தென்காசி தேசிய நெடுஞ்சாலை, மகப்பேறு மருத்துவமனை, சங்கரன்கோவில் சாலை ஆகிய பகுதி சாலைகளில் மழைநீா் வெள்ளம் போல் ஓடியது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.

மேற்கு மலை தொடா்ச்சியில் பெய்துவரும் மழையால், அய்யனாா் கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

SCROLL FOR NEXT