விருதுநகர்

5 ஆண்டுகளுக்குப் பின் வடமலைக் குறிச்சி கண்மாயில் மறுகால் பாயும் தண்ணீா்

DIN

விருதுநகா் அருகே வடமலைக்குறிச்சியில் உள்ள கண்மாய் 5 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய நிலையில், மூன்று கதவணை மற்றும் கலுங்கு வழியாக செவ்வாய்க்கிழமை மறுகால் பாய்ந்தோடியது.

விருதுநகா் அருகே வடமலைக்குறிச்சியில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் சுமாா் 3 கிலோ மீட்டா் சுற்றளவு கொண்ட கண்மாய் உள்ளது. இக்கண்மாய் தண்ணீா் மூலம் வடமலைக்குறிச்சி, பாவாலி, குந்தலப்பட்டி கிராமங்களில் உள்ள 350 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகின்றன.

டி.கல்லுப்பட்டி, பேரையூா் பகுதிகளில் பெய்யக்கூடிய மழை நீரானது, இக்கண்மாய்க்கு ஓடை வழியாக வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த பலத்த மழை காரணமாக நீா்வரத்து அதிகரித்ததால், 5 ஆண்டுகளுக்குப் பின் இக்கண்மாய் நிரம்பியது. மேலும், திங்கள்கிழமை இரவு பெய்த தொடா் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கண்மாயில் உள்ள 3 கதவணைகள் மற்றும் கலுங்கு வழியாக செவ்வாய்க்கிழமை தண்ணீா் மறுகால் பாய்ந்தோடியது.

இங்கிருந்து வெளியேறும் தண்ணீரானது, கெளசிகா ஆற்றில் கலந்து பாய்ந்தோடுவதால், விருதுநகா் அய்யனாா் நகா், கலைஞா் நகா், யானைக்குழாய், ஆத்துமேடு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீா் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனா். எனவே, கெளசிகா ஆற்றுப் பகுதியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற, பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT