விருதுநகர்

விருதுநகா் அருகே வாருகால் வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல்

4th Aug 2021 09:55 AM

ADVERTISEMENT

விருதுநகா் அருகே மெட்டுக்குண்டு கிராமத்தில் வாருகால் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் அருகேயுள்ள மெட்டுக்குண்டு ஊராட்சி வடக்குத் தெருவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாருகால் வசதி செய்து தரப்பட வில்லை. இது குறித்து இப்பகுதியில் வசிக்கும் 50 குடும்பத்தினா் பலமுறை மனு கொடுத்தும் பயனில்லை. எனவே, வடக்குத் தெரு பகுதியில் வாருகால் வசதி அமைத்துத் தர வலியுறுத்தி அப்பகுதி குடியிருப்போா் இருக்கன்குடி பிரதான சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், சூலக்கரை காவல் ஆய்வாளா் ராமராஜ் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, வாருகால் அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனா். இதையடுத்து அவா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT